புதுச்சேரி: குப்பைகளை அகற்றப் படாமல் விட்டால் புகார் தெரிவிக்க இலவச எண்..

Update: 2023-10-29 00:54 GMT

புதுச்சேரியில் தற்பொழுது நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடு வாரியாக வந்து ஒவ்வொரு விடையும் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்து இருக்கிறார்கள். அப்படி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை உங்கள் பகுதியில் வந்து வாங்காவிட்டால் அல்லது அப்புறப்படுத்தாமல் விட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் தற்போது வழங்கி இருக்கிறது. இதுகுறித்து உழவர் கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.


அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் கூறும் பொழுது, உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு குப்பைகளை சேகரித்த அவற்றை குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு ஸ்வஸ்தா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அதன்படி குப்பை பெற ஊழியர்கள் சரியாக படவில்லை என்றாலும் அல்லது குப்பை தொட்டியில் உரிய நேரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தாலும் குப்பை தொட்டிகள் தொடர்பான அனைத்து புகார் கொள்ளையும் 1800 42519 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.


 அது மட்டும் கிடையாது, தற்போது அதற்குரிய வாட்ஸ் அப் என்னும் இணைக்கப்பட்டு இருக்கிறது 7358391404 என்று வாட்ஸ் அப் எண்ணிலும் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம் என்று நகராட்சி சார்பில் கூறப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை விட்டு சாலை குப்பைத்தொட்டிகளில் அருகில் போடாமல் வீட்டிலேயே வைத்து நகராட்சி சுகாதார அலுவலரிடம் தகவல் தெரிவித்து குப்பை வண்டி மூலம் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் 0413-2200382 மற்றும் 7598151674 என்று வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News