புதுச்சேரி: நர்சிங் கவுன்சிலிங் கொண்டுவர முதலமைச்சர் நடவடிக்கை..

Update: 2023-10-31 01:10 GMT

புதுச்சேரியில் விரைவில் நர்சிங் கவுன்சில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துமனையில் 370 செவிலியர்களை நிரப்ப உள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி தொடக்க நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.


அதையடுத்து அங்கு இருக்கும் இந்த கல்வி ஆண்டு பயிலும் மாணவியருக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் கல்லூரி தொடங்குவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஏனெனில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி சிறந்த நிலையில் உள்ளது. சென்டாக் கலந்தாய்வில் மருத்துவப் படிப்புக்கு செல்ல அதிக மதிப்பெண் எடுத்தோர் இந்த மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்கிறார்கள்.


இங்கு செவிலியர் கல்லூரி சற்று தாமதாக தொடங்கியுள்ளோம். அதே நேரத்தில் முடிவு எடுத்தவுடன் விரைவாக செயல்படுத்தியுள்ளோம். இங்கு 60 இடங்களும், காரைக்காலில் 40 இடங்களும் கொண்டு வந்துள்ளோம். தகுதியானோரை கற்று தர நியமித்துள்ளோம். உடன் வேலை கிடைக்க வேண்டும் எண்ணமுள்ளோர் செவிலியர் படிக்க வருவார்கள். மேலும் நர்சிங் கவுன்சிலிங் அமைக்க நடவடிக்கை எடுத்துக் வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News