புதுச்சேரி: பசுமை திடலாக ஜொலிக்கும் அரசு கல்லூரி..

Update: 2023-11-06 01:59 GMT

புதுச்சேரி லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் அமைதி இருக்கிறது. 1961-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த கல்லூரி 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்ததன் காரணமாக இங்கு பெரும்பாலும் தரிசு நிலங்களாக கிடந்தது. கல்லூரியில் சுமார் 15 ஏக்கர்  தரிசு நிலங்களாக கிடக்க அவற்றை மாற்றும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் களமிறங்கியது.


அந்த வகையில் தற்பொழுது கல்லூரி வளாகம் முழுவதும் நகர்ப்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமைவலாக திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த அரியவகை வகைகளும் செடிக்குடி வகைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நகர்புற பசுமைக்காட்டில் புத்தர் தோட்டம், கரோனா நினைவு பூங்கா, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் ஆகியோர் பெயரில் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இயற்கை சார்ந்த திறந்தவெளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் விதமாக அமைதி வனமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.


மழைநீரை சேமிக்க சங்கம் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வரின் முயற்சியால் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புடன் வளாகம் முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News