ஒடிசாவில் கோர ரெயில் விபத்து: புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு!

ஒடிசாவில் கோர ரயில் விபத்திற்கு உதவிகளை வேண்டி புதுச்சேரி அரசு உதவி எண்களை அறிவித்திருக்கிறது.

Update: 2023-06-04 03:21 GMT

ஒடிசாவில் நேற்று ரயில்கள் இதை கோர விபத்து நடந்து இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரல் மண்டல விரிவுரையில் பெட்டிகள் தண்டவாளத்தில் சரிந்து இருந்தது. அப்பொழுது பெங்களூரு நோக்கி வந்த விரைவு எக்ஸ்பிரஸ் ஒன்று அதன் மீது மோதியதில் தடம் புரண்டது. மேலும் சரக்கு ரயில் பெட்டியும் இதன் மீது மோதியதில் 3 ரயில் மோதியதில் பெரும் கோர விபத்து நிகழ்ந்து இருக்கிறது.


இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் தற்போது வரை சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நோக்கி வந்த ரெயில் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒடிசாவிற்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி அரசும் ரயிலில் பயணித்தோர் விபரம் குறித்து அறிந்து கொள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையின் எண்ணை அறிவித்து இருக்கிறது. அதன்படி அவசர உதவிக்காக 1070, 1077, 112, 0413-2251003, 2255996 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இந்த அவசர கால மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News