புதுச்சேரியில் காலடி வைத்த ஒமைக்ரான் வைரஸ்!

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் சில நாட்களிலேயே உலக நாடுகளை ஆக்கிரமித்தது. இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 186 பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2021-12-28 11:05 GMT

மாநில வாரியாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165, ராஜஸ்தான் 46, குஜராத் 49, தெலங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளா 57 என பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 34 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy:Deccan Chronicle

Tags:    

Similar News