புதுச்சேரி - விரைவில் மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து பயணம்!

பள்ளி மாணவர்களுக்காக புதுச்சேரியில் ஒரு ரூபாய் பஸ் விரைவில் இயக்கப்படும்.;

Update: 2022-10-23 23:43 GMT
புதுச்சேரி - விரைவில் மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து பயணம்!

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் பேருந்து பயண செலவை குறைப்பதற்காக ஆளும் கட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் பேருந்து பயணம் வழங்கும் என்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தது. இப்பொழுது விரைவில் மாணவர்களுக்காக ஒரு ரூபாய் பேருந்து பயணம் இயக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.


இந்நிலையில் மாணவர்களுக்காக ஒரு ரூபாய் பஸ் விரைவில் இயக்கப்படும் என அமைச்சர் சத்திய பிரியங்கா உறுதி அளித்து இருக்கிறார். காரைக்கால் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவில் காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினராக அமைச்சர் சத்யா பிரியங்கா, எம்.எல் ஏ நாஜி தியாகராஜன், பெற்றோர் சங்க தலைவர் சிங்கராயர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் மாணவர் எனப் பலரும் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய அமைச்சர் பேசுகையில் விரைவில் மாணவர் பயணம் செய்ய ஒரு ரூபாய் கட்டணம் பேருந்து இயக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து சிறப்பாக கல்விக்கு பணியாற்றிய ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் சங்கம் சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News