மாநில எல்லையில் சோதனை.. கொரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!

புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் உள்ளிட்ட சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-12-30 06:36 GMT

புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் உள்ளிட்ட சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு விதிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்கலாம். அதனை பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அபராதம் விதிக்க நேரிடும். மேலும், வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது வரவேற்பு அறையில் இருப்பவர்கள் பங்கேற்பாளர்களின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை கேட்டு பெற வேண்டும். ஆய்வு செய்யாத ஓட்டல்கள், ரிசார்ட்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி அனுமதியும் ரத்து செய்யப்படும். புதுவை மாநில எல்லையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News