சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுதான் முன்னேறும்.. புதுவையில் பிரதமர் மோடி பேச்சு.!

சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுதான் முன்னேறும்.. புதுவையில் பிரதமர் மோடி பேச்சு.!

Update: 2021-02-25 12:38 GMT

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு சென்றார். இதன் பின்னர் புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டார். இதன் பின்னர் மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் அவர் உரையாற்றியதாவது: புதுவை மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி மண் பன்முகத்தன்மை அடையாளம் கொண்டது. இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் வந்துள்ளனர்.

புதிய உட்கட்டமைப்பு திட்டங்களால் சாலைப் போக்குவரத்து மென்மேலும் உயரும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். மேலும், காரைக்கால் -நாகை தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்கின்ற வகையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை, திருநள்ளாறு, வேளாங்கண்ணி, ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருவதற்கு பொதுமக்களுக்கு உதவுகின்ற வகையில் அமைந்துள்ளன.
அதே போன்று கடற்கரை வழிச்சாலை திட்டங்களை இணைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடல் வளம் அதிகமாக உள்ள மாநிலம் புதுச்சேரி, மேலும் சுகாதாரத்துறையில் எந்த நாடு முதலீடு செய்கின்றனவோ அதுவே வளர்ச்சியடையும் நாடாகவும் அமையும். தற்போது சுகாதாரத்துறையில் பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

Similar News