புதுச்சேரியில் 12 ரூபாய் குறைந்த பெட்ரோல் விலை ! தமிழகத்தில் விடியல் அரசு எப்போது குறைக்கும் ? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்!
மத்திய அரசு நேற்று இரவு முதல் அதிரடியாக கலால் வரியை குறைத்தது. இதனால் புதுச்சேரியில் வாட் வரி விகிதத்தை ரூ.7 அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.12 வரையிலும், வீசல் விலை ரூ.19 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் திமுக அரசு விலையை குறைக்குமா என்று பொதுமக்கள் ஏங்கியுள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நேற்று இரவு (நவம்பர் 3) முதல் ரூ.5.26 காசுகள் குறைத்தது. இதனையடுத்து தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களும் வாட் வரி விகித்தை குறைத்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மிதான வாட் வரி விகிதத்தை சுமார் ரூ.7 அளவிற்கு குறைப்பதற்கான அம்மாநில அரசின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இன்று (நவம்பர் 4) முதல் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் ரூ.12.85 அளவில் குறைக்கப்பட்டு தற்போது ரூ.94.94 விலையிலும், டீசல் விலை ரூ.19 அளவில் குறைத்து ரூ.83.58 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு குறைத்த விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்தில் 12 ரூபாய் குறைந்து 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் குறைவான அளவே குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக அனைவரும் கூறிவருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar