இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக பணிக்கு திரும்ப டி.ஜி.பி. உத்தரவு!

புதுச்சேரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் இன்றே (அக்டோபர் 3) அந்தந்த காவல் நிலையங்களில் பணிக்கு திரும்ப போலீஸ் டிஜிபி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Update: 2021-10-03 09:21 GMT

புதுச்சேரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் இன்றே (அக்டோபர் 3) அந்தந்த காவல் நிலையங்களில் பணிக்கு திரும்ப போலீஸ் டிஜிபி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், ஏட்டுகள், உதவி சப் இன்ஸ்பெக்டர்களில் பெரும்பாலானவர்கள் மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு செல்லாமலேயே அதே காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில டிஜிபி ரன்வீர் சிங் கிறிஸ்ணியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செல்லாத முடியவில்லை என்றால் நாளை (திங்கட்கிழமை) உரிய விளக்கத்துடன் பணியில் சேர வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy:The New Indian Express


Tags:    

Similar News