புதுவை விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம்..அமைச்சர் ஆய்வு.!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்வது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-29 06:04 GMT

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்வது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அரசு செயலாளர் விக்ராந்த் ராஜா, சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, விமான நிலைய இயக்குநர் விஜய் உபாத்யாயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரி விமான நிலைய ஓடுதளத்தை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு என்று தமிழக பகுதியில் சுமார் 104 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசிடம் பேச உள்ளோம். ஏற்கனவே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் சந்திந்து நிலம் ஒதுக்க கோரியுள்ளார். இது பற்றிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து தமிழக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என கூறினார்.

Tags:    

Similar News