புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு 144 தடை.!

தேர்தல் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் கூறும்பொழுது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

Update: 2021-04-03 03:21 GMT

புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது மற்றும் வீடு, வீடாக சென்று நோட்டீஸ் அளித்து வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையமும் தனது பணியை செய்து வருகிறது


இந்நிலையில், தேர்தல் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் கூறும்பொழுது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் அமைதிக்கு எதிராக சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கம்புகள், பேனர்களை வைத்திருத்தல் மற்று ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.




அதே நேரத்தில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தடை இல்லை. மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அனைவரும் அமைதியான முறையில் சென்று வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News