புதுச்சேரி - பா.ஜ.க MLAக்கள் உண்ணாவிரத போராட்டம்!

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி MLAக்கள் உண்ணாவிரத போராட்டம்.

Update: 2022-09-25 03:13 GMT

முதலமைச்சர் ரங்கசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சிகள் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படாமல் இருக்கிறது. புதுவையில் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு தற்போது நடந்து வருகிறது. பதவிகள் வழங்கும் கூட்டம் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக ஆறு இடங்களையும் பிடித்தது அதனைத் தொடர்ந்து அமைத்த அரசின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் ஆக உள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த செல்வம் சபாநாயகர் இருந்து வருகிறார் காங்கிரஸ் மூன்று மற்றும் பா.ஜ.கக்கு இரண்டு என்ற அமைச்சர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.


ஆனால் ஆட்சி அமைத்த நாள் முதல் காங்கிரஸ் கட்சி பல்வேறு பதவிகளை பா.ஜ.கவின் எம்எல்ஏவுக்கு கொடுக்க மறுத்து வருகிறது. ஆனால் வாரிய தலைவர் பதவி கூட கொடுக்காமல் பல்வேறு ஆட்சி நிர்வாகத்திலும் தலையிட விடாமல் செய்து வருவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இதனால் தொகுதி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து நேரடியாக புகார் தெரிவித்து வந்தார்கள்.


சமீபத்தில் நடந்த மதுபான தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கியதில் ஊழல் ஊழல் நடந்ததாக பா.ஜ.க எம்எல்ஏவான கல்யாணசுந்தரம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல் ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டசபையில் அரசின் மீது பகிரங்கமான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள். உண்ணா விரதத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களையும் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதன் பிறகு தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News