இரட்டை எஞ்சின் அரசினால் புதுச்சேரியில் நிகழும் மாற்றங்கள்!
புதுச்சேரியில் கால்நடைகள் சிகிச்சைக்கு அவசர நடமாடும் ஊர்திகள் வாங்க முடிவு.
புதுச்சேரியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 3 அவசர நடமாடும் ஊர்திகள் வாங்க உள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறி இருக்கிறார். குறிப்பாக புதுச்சேரியில் தற்பொழுது தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இது தொடர்பாக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு குறைகளை எதிர்க்கட்சித் தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள் இருந்தாலும் இரட்டை எஞ்சின் அரசின் காரணமாக புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் மற்றும் மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆறுமுகம் கேட்ட கேள்வியில், கால்நடைகளுக்கான அவசர உறுதி பயன்பாட்டில் உள்ளதா? என்பது தொடர்பான கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு புதுச்சேரி அமைச்சர் கூறுகையில், கால்நடைகளுக்கான அவசர ஊர்தி ஒன்று பயன்பாட்டில் உள்ளது. மேலும் 3 நடமாடும் அவசர ஊர்திகள் வாங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பிறகு புதுச்சேரியில் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காகவும் வீட்டு உபயோகத்திற்காகவும் தனித்தனிக் குழாய்கள் எத்தனை அமைக்க அரசுக்கு எண்ணம் இருக்கிறதா? என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.
விரைவில் நிதி பெற்று நடமாடும் தேவையின் அடிப்படையில் குடிநீருக்கும் இதர பயன்பாட்டிற்கும் தனிக்குழாய்கள் அமைப்பது குறித்து தேவைப்பட்டால் பரிசீலிக்கப்படும். நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருவதை கருத்தில்கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த போதிய விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படும்.
Input & Image courtesy: News