CUET தேர்வு யாருக்கு கட்டாயம்? புதுவை பல்கலைக்கழகம் கூறிய தகவல் என்ன?

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

Update: 2023-03-16 02:15 GMT

கடந்த ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பில் சேர்வதற்காக CUET தேர்வுகள் வாயிலாக தான் தற்பொழுது மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் முதுகலை வகுப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET (UG) -2023-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.


2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், https://cuet.samarth.ac.in/. என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதள www.pondiuni.edu.in/admissions-2023-24/ முகவரியில் பட்டப்படிப்புகளில் சேர தகுதியான பாடங்கள் மற்றும் இதர தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.


மேலும் தகவல்களுக்கு https://cuet.samarth.ac.in/ என்ற NTA-வின் இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் விவரங்களை ஏப்ரல் 1 முதல் 3 வரை திருத்தம் செய்யலாம். தேர்வு நடைபெறும் தேதி தற்போது வரை குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமான வலைதளத்தை தொடர்ந்து பின்பற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News