கடலோர காவல்படை செயல்பாடு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை?

புதுச்சேரி கடலோர காவல்படை செயல்பாடு குறித்து முதல்வர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

Update: 2022-12-23 02:27 GMT

புதுச்சேரி காவல் படை செயல்பாடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் செயல்பாடு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புதிய கமாண்டோக்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்திய கடலோர காவல் படையின் புதுமை கமாண்டராக அன்பரசன் சமீபத்தில் தான் பதவி ஏற்றி இருக்கிறார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து இது குறித்து பேசினார். அவருக்கு முதலமைச்சர் ரங்கசாமி தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்.


இப்பொழுது பாண்டிச்சேரியில் கடலோர காவல் படையின் பாதுகாப்பின் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் புதுவை கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தார்கள். மேலும் கடலோர காவல் படைக்க தேவையான இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் முதல்வர் உறுதி அளித்து இருக்கிறார்.


மேலும் பல்வேறு முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. கடலோர காவல் படை சார்பில் வரும் பணிகள் குறித்து கமாண்டர் அன்பரசன் விளக்கினார். குறிப்பாக கருவடி பத்தியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், புதிய விமான புதுவை விமான நிலையப் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் தளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News