அரசு சீராக நடைபெற தணிக்கை துறை அவசியம்: புதுச்சேரி முதல்வர் கருத்து!

அரசு துறை சீராக நடைபெற தணிக்கை குழு அவசியம் என்று புதுச்சேரி முதலமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Update: 2022-11-26 03:27 GMT

மக்கள் நலத்திட்டங்களில் விதிமீறல்கள் இருந்தால் தணிக்கை துறை அதை குற்றமாக கருதாமல் சீர்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். தணிக்கை தினத்தை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முதன்மை பொது கணக்கு தணிக்கை துறை சார்பில் குழு விவாத நிகழ்ச்சி புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், அரசு சீராக நடைபெறுவதற்கு தணிக்கை துறை அவசியம் செய்வது.


அதன்படி குறைகளை சீராக்கும் பொழுது அரசுக்கு மக்களில் நல்ல பெயர் கிடைக்கும். அதே நேரத்தில் மக்கள் நலத்திட்டங்களை அரசுத்துறை செயலர்கள் உள்ளிட்டோர் செயல்படுத்தும் பொழுதும் செலவினங்கள் சில மாற்றங்கள் செய்தால் அதை தணிக்கை துறை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திட்டங்களை செயல்படுத்த உதவும் வேண்டும். மக்களின் தேவைகளை விரைந்து செயல்படுத்தும் எண்ணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை வலியுறுத்துவது வழக்கம். அப்படி வலியுறுத்தி விரைந்து திட்டங்களை செயல்படுத்தும் பொழுது விதிகளை மீறும் கட்டாயம் ஏற்படும்.


எனவே மக்கள் நலனுக்காக திட்டங்கள் மாற்றி செயல்படுத்தும் போது தணிக்கை துறை அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் நலத்திட்டங்களில் நிதிகள் மாற்றப்படும் பொழுது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால் கண்டிக்கும் வகையில் அதை சுட்டிக் காட்டாமல் இருக்க கூறக்கூடாது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் புது புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: 



Tags:    

Similar News