புதுச்சேரியில் டிரோன் மூலம் நில அளவீடு - 163 பயனாளர்களுக்கு சொத்து அடையாள அட்டை!

புதுச்சேரியில் டிரோன் மூலம் நில அளவீடு செய்யப்பட்டு 163 பதிவாளர் சொத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-08 05:45 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்ரோன் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் நிலங்களை அளவீடு செய்து அதன் மூலம் கிராம மக்களுக்கு துல்லியமான அவர்களுடைய நிலத்தை சொந்தமாக்கி கொடுப்பதுதான். இந்த நில அளவீடு அட்டையின் முதன்மையான நோக்கம், இதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது புதுச்சேரியில் டிஜிட்டல் முறையில் சொத்து அடையாள அட்டையை வழங்குவதற்கான முயற்சிகளை தற்போது முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது.


புதுச்சேரி 163 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை டிஜிட்டல் முறையில் ரூமை பயன்படுத்தி நில அளவீடு செய்த அதன் மூலம் தற்போது சொத்து அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பையனாளர்களுக்கு அடையாள அட்டையை புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார். காரைக்கால் புதுச்சேரி அரசின் நில அளவை அலுவலகம் பதிவேடு துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலமாக நில அளவீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் நில அளவீடு பணிகள் முடிந்ததை தொடர்ந்து சொத்து அடையாள அட்டைகள் வந்தது. அது நிறைவையொட்டி முதல் கட்டமாக 163 பயனாளர்களுக்கு சொத்து அடையாள அட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு நபர்களும் இந்த ஒரு திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News