புதுச்சேரியில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - அடுத்து என்ன?
புதுச்சேரியில் மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக முதலமைச்சர் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெற செய்திருக்கிறார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மின்சார துறை தனியார் மையம் ஆவதை கண்டித்து மின்சாரத்துறை ஊதியர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இருள் சூழ்ந்த காணப்பட்டது. மேலும் ஆங்காங்கே மின்தடை காரணமாக மக்கள் பெரும்பாலும் அவதிப்பட்டார்கள். மின்சார துறையை தனியார் மையம் ஆக்குவது குறித்த அரசாங்கம் டெண்டர் விடுத்தது. புதுச்சேரி அரசின் நீண்ட முடிவை கண்டித்து பல்வேறு ஊதியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காலம் வரை இன்று தொடரும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப் பட்டிருந்தது. துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் மீண்டும் பணியாளர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தாலும் பணி செய்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை இந்த போராட்டத்தை முற்றிலும் தொடர்வோம் என்று போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.
இதன் காரணமாக புதுச்சேரியில் முதலமைச்சராக ரங்கசாமி தலைமையில் நேரடி பார்வையின் கீழ் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தைகள் தற்போது சமாதானம் கிடைத்துள்ளது. தற்போது மின்சார துறையை தனியார்மயம் ஒப்படைப்பது குறித்த கருத்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அரசின் தரப்பில் கூறப் பட்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று முதல் மின்சார துறை ஊழியர்கள் தங்களுடைய பணியை தொடர்ந்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy:News