புதுச்சேரியில் கலைகட்டும் மலர் கண்காட்சி: துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கம்!
புதுச்சேரியில் துவங்கியது காய், கனி, மலர் கண்காட்சி.
புதுச்சேரியில் தற்போது வேளாண் துறை சார்பில் 33வது மலர் மற்றும் காய் கனி கண்காட்சி துவங்கப் பட்டிருக்கிறது. இதை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்து இருக்கிறார்கள். வேளாண் துறை சார்பில் இந்த ஆண்டு 33 வது மலர் காய் கனி கண்காட்சி ரேடியர் மில் திடலில் தொடங்கி இருக்கிறது.
இதில் முதல்வர் தலைமையில் இந்த நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் கலந்து கொண்ட தொடங்கி வைத்து இருக்கிறார். மிகவும் தத்துரூபமாக தற்பொழுது மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு விதமான விலங்குகளின் உருவங்கள் தற்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அவை பார்ப்பதற்கு மிகவும் தத்துவமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக புதுச்சேரி வாழ் மக்கள் மற்றும் புதுச்சேரிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த கண்காட்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மலர்கண்காட்சியில் தற்பொழுது புதுச்சேரி அரசாங்கம் சார்பில் தோட்டக்கலை துறை உருவாக்கப்பட்ட 33 ஆயிரம் மலர் செடிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
Input & Image courtesy: The Hindu