திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக நம்புகிறார்கள் - தமிழிசை சௌந்தரராஜன்!

திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக நம்புகிறார்கள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

Update: 2022-10-10 02:24 GMT

திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக மக்கள் நம்புகிறார்கள் மற்றும் அவர் அவ்வாறு மாற்றப்பட்டு வருகிறார் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த அவர் சென்னையின் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் போது, தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி தற்போது தி.மு.க செல்வதாக மக்கள் நினைக்கிறார்கள்.


ஒரு பெண்ணுக்கு அரசியலில் ஒரு பதவி வருவது சிரமம். தி.மு.க துணை பொது செயலாளர் ஆன கனிமொழிக்கு எனது வாழ்த்துக்கள். திருவள்ளுவரை அறிமுகவாதியாக நம்புகிறார்கள். அவர் அவ்வாறு உருவகப் படுத்தப்பட்டு வருகின்றார். பல்வேறு இடங்களில் மிகப்பெரிய தலைவர்கள் சொன்னதையும் மற்றும் அரசர்களையும் நீங்கள் இந்துக்கள் அல்ல என்பது தொடர்பான பிரச்சனை தற்போது நடந்து வருகின்றது.


வரலாற்றை மீட்டெடுக்க மற்றும் மறைக்கப்பட்ட வரலாற்றை காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநர் ரவி திருவள்ளுவர் பற்றி கூறிய கருத்திற்கு, தனது கருத்தை புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். மேலும் ராஜ ராஜ சோழன் வரலாறும் மறைக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி ஒரு நோக்கத்திற்காக தான் தற்போது திருக்குறளை படிக்கிறார். அது பற்றி ஆராய்ச்சியில் தற்போது செய்து வருகிறார். இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசி இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News