காமராஜர் வழித்தோன்றலாக இருப்பது பெருமை: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

காமராஜரின் வழி தோன்றலாக இருப்பது தனக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்.

Update: 2022-12-07 09:16 GMT

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நாடார் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநிலம் ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, கல்வி மற்றும் மருத்துவ சேவை காண கட்டிடங்களை திறந்து வகித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இவர் இது பற்றி அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தின் தென் பகுதி மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம். நாட்டிற்கே பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நீங்கள். வேலைக்கு செல்பவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தின் உயர்த்தும்போது ஆக பல்வேறு மக்கள் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


காமராஜரின் வழி தோன்றலாக இருப்பது எனக்கு பெருமை என்று பேசுகிறார். மேலும் விழாவில் பனைப் பொருட்கள் விற்பனையில் கலந்து கொண்டார். மேலும் விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நடராஜன், நாடார் சங்க தலைவர் காளிதாசன், சுரண்டை நாடார் சங்க தலைவர் கணேசன், இந்து நாடார் பேரவை தலைவர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News