திறமையானவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆதங்கம்!
திறமையானவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் மற்றும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கோவையில் உள்ள நிகழ்ச்சிக்கு வருகை தந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழக மக்கள் திறமையானவர்களை அங்கீகரிப்பதில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை அவர் பவு செய்து இருக்கிறார். குறிப்பாக மாநிலங்களுக்கு நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர்கள் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு அதன் பின்னர் குடியரசுத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
தமிழக மக்கள் எங்களைப் போன்றோரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை. எனவே மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் கண்டு ஆளுநராக நியமித்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. மக்கள் எங்களைப் போன்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருந்தால், எங்களை மத்திய அமைச்சர்கள் ஆக்கியிருப்பார்கள். தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
எங்களைப் போன்றோர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள், மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் நல்லவர்களை தமிழக மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். .
Input & Image courtesy: News 18