புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு ₹.1400 கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு!

புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசு 1400 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

Update: 2022-10-19 14:38 GMT

புதுச்சேரியில் சட்டசபை ஒரு இடத்திலும் தலைமை அலுவலகம் மற்றொரு இடத்தலும் இருந்து வருவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் கனவு திட்டமான தட்டாஞ்சாவடியில் புதிய சட்டசபை கட்டும் திட்டம் கையிலே எடுத்தார். ஆனால் போதிய நிதி இல்லாததால் இந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. உள்ளது 2020 ஆம் ஆண்டு புதிய நில சட்டத்தின் அடிப்படையில் புதிய சட்டசபை கட்டிடம் கட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சட்டசபை வளாகம் கட்டும் திட்டத்திற்கு மீண்டும் அடி போடப்பட்டது.


சுமார் 320 கோடி செலவில் புதிய சட்டசபை கட்டிடம் கட்ட மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்றது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம் புதிய சட்டசபை கட்ட திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வரைபட மாதிரி வரைபடத்தை சட்டசபையில் சமர்ப்பித்தார். புதிய சட்டசபை கட்ட சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரி வலியுறுத்தினார். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் புதிய சட்டசபை கட்டுவது தொடர்பான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக 1700 கோடி வழங்கிட மனுவை கொடுத்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து இதற்கான விளக்கத்தையும் எடுத்துக் கூறினார். அதுக்கடுத்து மத்திய அரசு புதுச்சேரியில் புதிய சட்டசபையை கட்டிடம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சிறப்பு நிதியாக 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News