செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கூடுதல் தொகை வழங்க புதுச்சேரி அரசு முடிவு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரியில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும் பொழுது கூடுதலாக தொகையை செலுத்த புதுச்சேரி அரசு முடிவு.
செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும்போது புதுச்சேரி அரசும் கூடுதலாக தொகை செலுத்த முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுவது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக தொடங்கப்படும் கூடுதல் தொகைக்கு புதுச்சேரி அரசு கூடுதலாக பணம் செலுத்து முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகவும் தற்பொழுது புறப்பட்டு இருக்கிறது. மேலும் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பம் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பேசும் பொழுது "மகளை காப்போம்: மகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் மக்களுக்கு தெரிய வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால் திருமணத்திற்கு பிறகு என்ன செய்வது? என்று பயந்த ஒரு காலத்தில், இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை பெற்றோருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு நோக்கில் இந்தத் திட்டம் மத்திய அரசினால் மிகவும் சிறப்பான வகையில் வழிநடத்தப்பட்டு தொடரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளுக்கும் கல்வி பெரும் அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த ஒரு திட்டத்தை பெற்றோர்கள் தொடங்கி பயன்பெற வேண்டுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
Input & Image courtesy: Hindu News