புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட ஹெல்மெட் - இல்லையெனில் ₹1, 000 அபராதம்!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லையெனில் ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும்.

Update: 2022-10-08 04:45 GMT

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக் ஓட்டும் வாகன ஓட்டுகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புதுச்சேரியில் இந்த விதிமுறை பற்றி தெரியாமல், ஹெல்மெட் அடையாமல் பைக்கில் பறக்கிறார்கள். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் விபத்தில் சிக்குபவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகிறார்கள். உயிரிழக்கும் அதிகமாக ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் தற்போது புதுச்சேரி அரசாங்கம் இந்த ஒரு முடிவை கையில் எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.


எனவே ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 107 பேரும், இந்த ஆண்டு 22 பேரும் உயிரிழந்து உள்ளார்கள். புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என மாநில சாலை பாதுகாப்பு பாதுகாப்பு குழுவிற்கு தேசிய சாலை பாதுகாப்பு குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ளது. குழு கூட்டத்தில் முடிவுபுதிய மோட்டார் வாகன சட்டப்படி, பைக் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரும்போது கட்டாயம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதும் தற்பொழுது புதிதாக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நேற்று பாதுகாப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் நமச் சிவாயம், ஓம் லட்சுமி நாராயணன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஒரு கூட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்ப்பதும் மற்றும் குறைப்பது எவ்வாறு? என்ற வகையில் கூட்டம் நடைபெற்றது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News