முதல்முறையாக கடல்சார் திட்டமிடல் சாப்ட்வேர்: புதுச்சேரியில் தொடங்க இருக்கிறது!

கடலூர் ஆராய்ச்சி களுக்கான முதல் முறையாக கடல் சார்ந்த ஆராய்ச்சிக்கான தேசிய மையம் புதுச்சேரியில் தொடங்க இருக்கிறது.

Update: 2023-02-14 01:29 GMT

புதுச்சேரியில் தற்பொழுது கடலோர ஆராய்ச்சி பகுதிகளுக்கான கடல் சார் திட்டமிடல் சாப்ட்வேர் நிறுவப்பட இருக்கிறது. புதுச்சேரியில் கடலோர ஆராய்ச்சிகளுக்கான தேசிய மையம் தற்பொழுது தொடங்கப்பட இருக்கிறது. புதுச்சேரியில் கடலோர ஆராய்ச்சிகளுக்கான தேசிய மையம் அனுமதி இருக்கிறது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடைபெற்று இருக்கிறது. புதுச்சேரியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி தற்பொழுது இது தொடர்பான செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.


புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவும், நார்வேயும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடல் பரப்பின் கடல்சார் திட்டமிடல் துறையில் கூட்டாக பணியாற்ற ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக ஆற்றல், போக்குவரத்து, நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கடலில் மனித செயல்பாடுகள் திறமையாக மற்றும் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய மையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


இந்தோ-நார்வே ஒருங்கிணைந்த பெருங்கடல் முன்முயற்சி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு இரு நாடுகளிடையே கையெழுத்தானது. லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகியவை இந்த திட்டத்திற்கான முன்னோடி தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன இன்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News