புதுச்சேரி: மூலிகை தாவர வளர்க்க அமைச்சர் ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரியில் மூலிகை தாவரங்களை வளர்ப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

Update: 2022-11-28 02:16 GMT

புதுச்சேரியில் மூலிகை தாவர வாரியம் மற்றும் தோட்டக்கலை துறை மருந்து கட்டுப்பாட்டு துறை கால்நடை துறை இணைந்து மூலிகை தாவரம் வளர்த்து மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.


சட்டசபையில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்குவதில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி காரைக்கால் வேளாண் கல்லூரியில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இக்கூட்டத்தில் மூலிகை தாவரம், தோட்டக்கலை மருந்து கட்டுப்பாட்டு, கால்நடை துறைகள் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. மூலிகை தோட்ட அமைக்க விவசாயிகள் தற்பொழுது ஊக்கவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் புதுச்சேரியில் மூலிகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதன் தொடர்பாக இந்த கூட்டம் நடைபெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News