புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்பு.!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் முதலமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்க உள்ளார்.

Update: 2021-05-07 04:46 GMT

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் முதலமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்க உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து கடந்த 3ம் தேதி ஆட்சி அமைக்க கோரினார்.




 


அப்போது ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தெரிவிக்கும் நேரத்தில் பதவி ஏற்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி புதுவை முதலமைச்சராக ரங்கசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு பதவி ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கான விழா ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மிக எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய முதலமைச்சராக ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Similar News