மீன்பிடி தடைகால நிவாரணம் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்!

Update: 2022-05-27 13:48 GMT

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்து 500 மீன்பிடி தடைகால நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக 16 ஆயிரத்து 917 குடும்பத்துக்கு ரூ.9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தடைகால நிவாரண தொகையை மீனவ குடும்பங்களுக்கு வழங்குகின்ற நிகழ்ச்சியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மெத்தம் புதுவையை சேர்ந்த 8 ஆயிரத்து 287, காரைக்காலில் 3 ஆயிரத்து 25, ஏனாமை சேர்ந்த 4 ஆயிரத்து 870 குடும்பங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Source, Image Courtesy: Malaimalar

Tags:    

Similar News