புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் நீர் திருவிழா மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக பாகூரில் நீர் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இதில் செயலர் முனியன் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலந்து கொண்டு நீர்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என கலை கட்டியது. நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியானது பாகூர் மாடவீதிகள் வழியாக சென்றது. அதன் பின்னர் பாகூர் பிள்ளையார் கோயில், சிவன் கோயில், திரவுபதி அம்மன் கோயில் வழிபாட்டிற்காக நீர்க்குடம் வழங்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நீர்நிலைகளை பாதுகாக்க ஒரு விழிப்புணர்வாக அமையும் என விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar