புதுச்சேரி - அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

Update: 2022-10-21 12:52 GMT

தீபாவளி பண்டிகை அன்று உதவித்தொகை வழங்க கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போலீஸ் சாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் தீபாவளி உதவித்தொகை வழங்க கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட உள்ளார்கள். அப்பொழுது போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தீபாவளி உதவித்தொகையாக 3500 வழங்க கோரி தொழிலாளர் துறை அமைச்சர் சத்திய பிரியங்கா விடம் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேச்சு வார்த்தையை நடத்தினார்கள்.


இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன் வீதி மாதா கோயில் அருகே ஒன்று கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை முற்றுகையிட்ட ஊர்வலமாக புறப்பட்டார்கள். ஊர்வலத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் செய்து செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்த பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் தொழிலாளர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு வெளியே செல்ல முயற்சி அவர்கள், இதனால் அந்த பகுதியில் பெரும் போராட்டம் நிலவியது.


தொழிலாளர்களின் இந்த ஒரு கோரிக்கை காரணமாக விரைவில் தீர்வு எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு புதுச்சேரி அரசாங்கம் தீபாவளி பரிசு தொகையாக ரூபாய் 500 வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுடைய நல்லனுக்காக 3,500 கேட்டுள்ள கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News