புதுச்சேரி ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை: கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!
புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி மாநிலம் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் கௌரவ தின விழா திருக்கனூர் அருகே உள்ள காட்டேரி குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் வரவேற்றார். மேலும் அமைச்சர் நமச்சிவாயம்,பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் இது பற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கட்சியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஒருவரை போன் செய்து மிரட்டி இருக்கிறார்கள். இது தேசப்பற்றை மீரும் செயலாக இருக்கிறது. தேசத்திற்காக போராடும் வீரர்களை அவமதிக்கும் செயலாகும். வக்கீல்கள் நியமத்தில் எனக்கு நேரடியாக சம்பந்தம் இல்லை இதில் புதுவை என்றும் புறக்கணிக்கப்படாது.
தலைமை செயலகத்தின் சட்ட செயலாளர்க்கும் தேர்தலை நடத்தினார். வக்கீல்கள் நியமனதில் முதலமைச்சருக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்று கூறுகிறார். மேலும் முதலமைச்சருக்கும் எனக்கும் பாச இணைப்பு தான் உள்ளது என்று கூறியிருந்தார். செயற்கையாக ஏற்படுத்தக்கூடிய விரிசல் தான் இது. கவர்னர்களை மோசமாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டம் விரைவில் தடை செய்யப்படும். அதற்கு கவர்னரின் ஒப்புதல் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy: Malaimalar