புதுச்சேரி - மின்தடையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

புதுவையில் பெரியார் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Update: 2022-09-26 02:39 GMT

புதுச்சேரியில் பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு பெரியாறு நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்த பகுதியில் தினமும் அடிக்கடி மின்வெட்டு பல மணி நேரமாக ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் அந்த பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து அதில் இருந்து துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு முறை புகார் அளித்தும். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் நேற்று மாலை 5 மணிக்குள் திடீரென மின்தடை ஏற்பட்டது இரவு 8 மணி மேல் ஆகியும் மின் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் நெல்லிதோப்பு பகுதியில் இரவு 9 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்.


இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை முடிவில் தோல்வி ஏற்பட்டது. மேலும் இது குறித்து தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ்காரர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சு வார்த்தையில் விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News