புதுச்சேரி: ரூ.91 கோடியில் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடக்கம்!

புதுச்சேரியில் 91 கோடியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

Update: 2022-11-27 06:04 GMT

இந்தியாவில் இருக்கின்ற 40 இரயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் புதுச்சேரி ரயில் நிலையமும் அடங்கும். இதில் புதுச்சேரியில் ₹.91 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் இந்த மேம்பாட்டு பணிகளுக்காக ஐந்து ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற இருக்கிறது. பெரு நகரங்களில் உள்ளது போல ரயில் நிலைய பகுதிக்குள்ளே பஸ்கள் வந்து செல்லும் வசதி போன்றவை அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் வணிக வளாகங்கள், பயணிகளுக்கான தங்கும் இடம், ரயில்வே ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறை, நகரும் படிக்கட்டுகள், லிப்ட்டுகள், பிளாட்பாரங்கள் மேம்பாலங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


இதற்காக மத்திய அரசின் சார்பில் தற்பொழுது திட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது சுமார் 91 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது அதனுடைய முதற்கட்டமாக பணிகள் நேற்று முதல் தொடங்கியது. தற்போது உள்ள ரெயில்நிலைய கட்டிட பகுதிகளில் இவை அமைய உள்ளன.


புதிய கட்டிடங்கள் கட்ட இந்த இடத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியுள்ளது. தற்காலிக அலுவலகம் முதற்கட்டமாக அமைக்கப்பட உள்ளது. தற்போது இங்கு செயல்படும் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகம் என்று அனைத்தும் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளது. தற்காலிக அலுவலகம் அமைக்க வசதியாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டும் பணி நேற்று நடந்தது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News