பா.ஜ.க. கூட்டணியில்தான் என்.ஆர்.காங்கிரஸ் இருக்கிறது.. புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் பேச்சு.!

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்களது கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்று புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

Update: 2021-03-05 07:15 GMT

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்களது கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்று புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநிலத்தில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது.


 



இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ராஜினாமா செய்யப்பட்ட எம்.எல்.ஏ., இணைந்தார். அது மட்டுமின்றி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வந்தது.

இதனிடையே புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் என்று பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில், தோல்வி பயத்தால் மக்களை குழப்பும் பணியில் திமுக காங்கிரஸ் ஈடுபடுவதாக புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் ரங்கசாமி உள்ளார் எனவும் இன்னும் சில நாட்களில் கூட்டணி முடிவாகும் என்று கூறினார்.

Similar News