புதுச்சேரியில் கொரோனா தொற்று நிலவரம் !

புதுச்சேரியில் புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2021-08-06 12:31 GMT

புதுச்சேரியில் புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது பற்றி புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 5,836 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி 55, காரைக்கால் 8, ஏனாம் 3, மாஹே 22 என மொத்தம் 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு 1,799 ஆக உயர்ந்துள்ளது.   

103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.

Source: Hindu Tamil

Image Courtesy: The Hindu

https://www.hindutamil.in/news/tamilnadu/701941-puducherry-corona-update.html

Tags:    

Similar News