புதுச்சேரி மாநிலம்: இன்று முதல் பள்ளிகளில் முழுநேர வகுப்புகள் தொடக்கம்.!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

Update: 2021-03-03 04:30 GMT

புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது.


 



இதனிடையே தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதால் ஊரடங்குகளும் தளர்த்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி முதல் தொடங்கியது. இதில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றது.

இதன் பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சந்தேகத்தை போக்குவதற்காக கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இதனால் மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்த முடியால் ஆசிரியர்கள் அவதியுற்றனர். மாணவர்களும் ஒருவிதமான குழப்பத்திற்கு ஆளாகினர்.


 



இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழுநேரமும் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் முழு நேரமும் செயல்படும். வாரத்திற்கு 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்வதை காணமுடிகிறது.

Similar News