பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர ஆசையா? கவலையை விடுங்க வந்தது கியூட் தேர்வு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர கியூட் தேர்வு.

Update: 2023-04-27 03:41 GMT

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர சி.யு.இ.டி தேர்வு - 2023 க்கு விண்ணப்பிக்க , கடைசி தேதி 5 மே 2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-இன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பத்தளம் 20.03.2023 முதல் திறக்கப்பட்டுள்ளது.


2023ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைப் பட்டம் / பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சி.யு.இ.டி (PG) – 2023-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சி.யு.இ.டி (பிஜி) – 2023-க்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புகளின் தகுதித் தேவைகளை கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும்.


மேலும் https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வு தாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/ என்னும் என்.டி.ஏவின் வலைத்தளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப் படுகிறார்கள். பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, கடைசி தேதி 5 மே 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள 6 மே 2023 முதல் 8 மே 2023 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News