புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - சிறப்பு விருந்தினராக துணை குடியரசு தலைவர்!

துணை குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.

Update: 2023-02-24 02:24 GMT

புதுவைப் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி28 அன்று நடைபெறவுள்ளது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா 2023 பிப்ரவரி 28 செவ்வாய் அன்று ஜவஹர்லால் நேரு அரங்கம், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியும், பட்டமளிப்பு உரையை நிகழ்த்தவும் மற்றும் நான்கு புதிய கல்விக் கட்டடங்களை திறந்து வைக்கவும் இசைந்துள்ளார்.


இந்த 29 வது பட்டமளிப்பு விழாவின் போது, 21,208 புதுவை பல்கலைக்கழக மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களும் மற்றும் 10,649 தொலைதூர கல்வி மாணவர்களும் என மொத்தம் 31,857 மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளனர் அதில் 242 ஆராய்ச்சி மாணவர்களும், பல்வேறு PG/UG பட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்கள் பெறவுள்ள 187 மாணவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


29 வது பட்டமளிப்பு விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழகம் செய்து வருகிறது என அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நான்கு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட இருப்பது அங்குள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News