புதுச்சேரி: பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி கட்டுரைக்கு சர்வதேச அங்கீகாரம்
புதுச்சேரியில் பல்கலைக்கழக பேராசிரியரின் ஆராய்ச்சி கட்டுரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், உபயோகிக்கப்பட்ட டீ கோப்பையை கொண்டு எளிய வேதியியல் செயலாக்கத்தின் மூலம் செலினியம் கலந்த மெசோபோரஸ் கார்பனை மின்முனையை உருவாக்கி அதன் மூலமாக பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் ஏழுமலை தலைமையில், ஆராய்ச்சியாளர் சங்கர் தேவி அவர்கள் ஒரு எளிய முறையிலான வேதியியல் செயலாக்கத்தின் மூலம் உயர் சக்தி கொண்ட மின்முனையை (Electrode) உருவாக்கி அதன் மூலம் அதிக ஆற்றல் திறன் கொண்ட லித்தியம்-ஆக்சிஜன் பேட்டரியை (Li-O2) தயாரித்து சோதனை செய்துள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆய்வுக் கட்டுரையானது லண்டனில் இருந்து வெளி வரும் இராயல் வேதியியல் சோசைட்டியின் (Royal Society of Chemistry) பன்னாட்டு இதழான New Journal of Chemistry-யின் அட்டைப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். லித்தியம்-ஆக்சிஜன் பட்டன் பேட்டரியின் புகைப்படம், செலினியம்-சேர்க்கப்பட்ட கார்பனை நேர்மின்முனையாகவும் லித்தியம் உலோத்தை எதிர்மின்முனையாகவும் கொண்ட பட்டன் பேட்டரியின் குறுக்கு வெட்டு புகைப்படம், சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜிங் செய்யும் போது பேட்டரிக்கு தேவைப்படும் காற்றை (O2) எடுக்கும் இயற்கைச் சூழல், உபயோகிக்கப்பட்ட காகித கோப்பைகளில் இருந்து செலினியம்-சேர்க்கப்பட்ட கார்பன் இவை அனைத்தும் ஆரோவில் குலோப் (Aurovile globe) முன்னணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நவீன மின்னணு சாதனங்களின் ஆற்றல் தேவைக்கும், மின்சார வாகன வளர்ச்சிக்கும் மற்றும் மரபுசாரா ஆற்றலை பயன்படுத்துவதில் வளர்ந்து வரும் ஆர்வம் ஆகியவை, மின்வேதியியல் மூலமாக ஆற்றலை சேமிக்கும் பேட்டரி சாதனங்களுக்கு மிகப்பெரிய தேவையை வழிவகுத்துள்ளது.
Input & Image courtesy: News