புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

புதுச்சேரியில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையானதா? சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Update: 2023-03-05 00:44 GMT

புதுச்சேரியில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவுகிறது. ஆனால் வைரஸ் காய்ச்சல் இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். குறிப்பாக புதுச்சேரியில் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் மிகவும் வேகமாக பரவுவதாகவும் அதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தவறான முறையில் பரப்பப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் பொய் தற்பொழுது பரவி வரும் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குனர் திட்ட வட்டமாக தெரிவித்து இருக்கிறார்.


குறிப்பாக மருத்துவமனைகளில் கூட்டம் மற்றும் புதுச்சேரி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் என்பதன் பெயரில் அதிமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் வைரஸ் காய்ச்சல் என்ற ஒரு போலியை பரப்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, உடல் வலி நோயாளிகள் தனியார் கிளினிக்குகளில் நீண்ட வரிசையில் சிகிச்சை மற்றும் வருவதால் இதற்காக ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் ஒரு நபருக்கு மருத்துவ ஆலோசனை கட்டணமாக 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவும் எனவே மக்கள் கூட்டமாக இருக்க வேண்டாம் என்றும் அதிக வதந்திகளும் பரவி வருகின்றது. இவற்றை தடுக்கும் பொறுப்பு சுகாதாரத் துறைக்கு ஒன்று மேலும் தற்போது பரவி வரும் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் தான் வைரஸ் காய்ச்சல் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News