ஹெல்மெட் அணிவது கட்டாயம்: மக்களின் ஒத்துழைப்புடன் மட்டும்தான் சாத்தியம்!

புதுச்சேரியில் மக்களின் ஒத்துழைப்பால் மட்டும் தான் ஹெல்மெட் அணிவது கட்டாயம் சாத்தியமாக்கப்படும்.

Update: 2022-10-31 03:37 GMT

புதுச்சேரியில் வாகன ஓட்டிகளில் அனைவரும் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக மக்களின் முழு தொடர்புடன் மட்டும் தான் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது சாத்தியமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1-தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.


எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. வீதியில் இரண்டு பக்கங்களிலும் வாகனம் நிறுத்தும் முறை, தடை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் வீதிகளில் வடக்கு பக்கம் மட்டும்தான் ஒரு வரிசையில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். இந்த நடைமுறையானது முன்பு இருந்தது போல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கும் தடை, பொது பணித்துறை சார்பில் சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள செஞ்சி சாலையின் குறுக்கே செய்த மளிகை கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.


இதனால் வருகின்ற 13-ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு அந்த பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அவசியமாக்கப்பட்டுள்ளது. இதை மீறி நட போருகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தகுந்து தங்கள் உயிரிழப்பு பாதுகாக்க முறையான ஹெல்மெட் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News