புதுச்சேரி: மசாஜ் சென்டரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:40 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

புதுச்சேரியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 40 பேர் மீது போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-24 10:07 GMT

புதுச்சேரியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 40 பேர் மீது போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சுற்றுலாவிற்கு பெயர் போன நகரமாக விளங்கி வருகிறது. அங்கு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அண்ணாநகர், கோரிமேடு பகுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 7 பெண்களை மீட்டனர். அதில் வாடிக்கையாளர் மற்றும் புரோக்கர் என்று 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதன் பின்னர் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் வரவழைத்து அவர்களிடமும் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்பாவில் சிறுமி ஒருவர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சிக்கு வந்த அவரை ஸ்பா உரிமையாளர் பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 40 பேர் வரை அச்சிறுமியிடம் பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Hindu Tamil

Image Courtesy:Daily News


Tags:    

Similar News