புதுச்சேரியில் மோடி அரசினால் பாலின சமத்துவம் குறித்த பிரச்சாரம்!

புதுச்சேரியில் மோடி அரசினால் பாலின சமத்துவம் குறித்த தீவிர பிரச்சாரத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு காணொளி காட்சிகள் மூலமாக துவங்கி வைத்தார்.

Update: 2022-11-11 04:16 GMT

புதுச்சேரியில் காரிய குப்பம், வில்லியநல்லூர், காரைக்காலில் பாலின சம உரிமையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மையங்களை ஜனாதிபதி இன்று காணொளி காட்சிகள் மூலமாக திறந்து வைத்தார். புதுச்சேரியில் பாலின பல மையங்கள் மத்திய அரசின் கீழ் தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின் வழிகாட்டுதலின்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு மற்றும் பாலினம் சம உரிமை வழங்குதல் ஆகியவற்றைப் பற்றி இந்த பிரச்சாரங்கள் தீவிரமாக சென்றடைய இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் தினமாக கடைபிடிக்கப்படும் அந்த வகையில், புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக வகிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வருகின்ற 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தீவிரப் பிரச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


இதற்கு முன்னேற்பாடாக அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்த செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு பாலின சமத்துவம் வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நான்கு வாரத்திற்கு தீவிர பயிற்சி புதுச்சேரியில் அளிக்கப்பட இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News