புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

Update: 2021-02-24 16:12 GMT

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அந்த கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து நாராயணசாமி ஆளுநரை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி நிலவரம் பற்றிய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். இது குறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீண்டும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை ஜனாதிபதி ஆட்சியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar News