புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ., செல்வம் போட்டியின்றி தேர்வு.!

சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பாஜக எம்.எல்.ஏ., ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-06-15 08:08 GMT

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டமன்ற செயலளர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.

இதனிடையே நேற்று மணவெளி தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ஏம்பலம் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்தும் வழி மொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.


 



இந்நிலையில், இன்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. இதனால் சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பாஜக எம்.எல்.ஏ., ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை புதுச்சேரி சட்டசபை கூடுகிறது. அப்போது தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி அறிவிக்க உள்ளார். பாஜக முதன் முறையாக புதுச்சேரி சட்டமன்றத்தில் சபாநாயகர் பொறுப்பை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News