புதுச்சேரி நகரில் இயங்கி வரும் குபேர் மீன் அங்காடியில் மீன் இறக்குவதற்கு போலீசார் திடீரென்று தடை விதித்ததை எதிர்த்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் குபேர் மீன் அங்காடி. அந்த கடையால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சசேரி அரசு கிழக்கு கடற்கரை பகுதியில் மிக நவீன முறையில் அங்காடியை திறந்து வைத்தது.
அங்கு சுமார் 5 ஆண்டுகளாக ஆகியும் அந்த அங்காடிக்கு மீனவர்கள் யாரும் செல்லாமல் பழைய அங்காடியில் மீன் விற்பனை செய்து வந்தது. இதனையடுத்து குபேர் மீன் அங்காடிக்கு மீன் இறக்குவதற்கு இன்று முதல் அரசு தடை விதித்தது.
இந்நிலையில், மீன்களை இறக்குவதற்கு வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பழைய மீன் அங்காடியில் மீன் விற்பனை செய்வதற் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற முக்கழத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
Source, Image Courtesy: Polimer