புதுச்சேரியில் நாளை முதல் தொடங்கும் பகல் நேர ஊரடங்கு.!

நாளை முதல் வார முழுவதும் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-25 04:47 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை அதிகமாகியுள்ளது. நேற்று நிலவரப்படி 899 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். இதனால் தொற்று பரவலை தடுக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை 55 மணி நேர முழு ஊரடங்கு தொடங்கியது.




 


மேலும், நாளை முதல் வார முழுவதும் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பகல் நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




 


இந்த சமயங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News