புதுச்சேரியில் பா.ம.க. தனித்துப்போட்டி.!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-03-09 13:40 GMT

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், அதிமுக, பாஜக இதர தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியது.




 


மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் தனித்து போட்டியிட முடிவு செய்து, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமக 30 தொகுதிகளில் தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News